கோவை: கோவையில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக கட்டப்பட்டிருந்த 12 அடி உயர தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளத்தின் கரையில் அசோக் நகர் பகுதியில் சுமார் 12 அடி உயரத்தில் தடுப்பு சுவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அமைக்கப்பட்டு நடைபாதை அமைக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக அசோக் நகர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த 12 அடி உயர தடுப்புச் சுவர் சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு இடிந்து விழுந்தது. தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது அசோக் நகர் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சுவர் அமைக்கும் பணி முடிந்து 6 மாதமே ஆகியிருப்பதாகவும், தற்போது சுவர் இடிந்து விழுந்து இருப்பது கட்டுமான பணிகள் தரம் குறைந்தவையாக இருப்பதை காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்..
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் கட்டப்பட்ட அனைத்து அரசு கட்டுமானங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.