கொரோனா கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்..! திரையரங்குகளில் 50 சதவிகிதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி!

கோவை: கொரோனா தொற்று இரண்டாம் அலை பெருகிவரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் அக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.


கோவை: கொரோனா தொற்று இரண்டாம் அலை பெருகிவரும் நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று முதல் அக்கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், திரையரங்கம், மால் போன்ற பொது இடங்களில் 50 சதவீத மட்டுமே மக்கள் பயன்படுத்த அனுமதி மற்றும் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



கோவையில் இந்த விதிமுறைகளை பின்பற்றும் விதமாக பேருந்துகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு பயணிகள் அமர்த்தப்பட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.



மேலும், திரையரங்குகளில் சமூக இடைவெளி மற்றும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற விதிகளை தீவிரமாக பின்பற்றுகின்றனர்.

அதேபோல, திரையரங்குகளுக்கு வருபவர்களில் உடல் வெப்பம் கண்காணிக்கப்பட்டு, கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறது. மேலும், பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லாவிட்டால் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...