வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: வாக்குப்பதிவு எந்திரங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்து 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் தடாகம் சாலையில் உள்ள ஜி.சி.டி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 10 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் அங்கு தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் தங்கி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை என கூறி பா.ஜ.க மாவட்ட தலைவரும், தலைமை ஏஜென்டுமான நந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்கு பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் நபர்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, தங்குமிடம், உணவு வசதி கூட இங்கு கிடையாது எனவும்,அவற்றை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும், ஆனால் அதை அரசு முறையாக செய்து கொடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.



மேலும், கொரோனா நோய் தொற்று காலத்திலும் அனைத்து கட்சிகளை சேந்தவர்களும் குறுகிய இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது எனவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதத்தில் அதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிட்ட போது, அதிகாரிகள் நாளை முதல் உரிய அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருப்பதாகவும், அப்படி அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் எனவும் நந்தகுமார் தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...