அரக்கோணம் இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோவை: அரக்கோணம் சோகனூர் இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: அரக்கோணம் சோகனூர் இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து கோவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (20). செம்பேடு காலனியைச் சேர்ந்தவர் சூர்யா (25). நண்பர்களான இருவரும் ஏப்ரல் 7ம் தேதி இரவு கௌதம நகர் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டனர்.

இந்த இரட்டை கொலை சம்பவத்தை பற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது, அரக்கோணத்தில் பாமக சாதிவெறியர்களால் இளைஞர்கள் தாக்கப்பட்டதாகவும், பானை சின்னத்திற்காக வாக்கு கேட்டது தான் இவர்கள் செய்த குற்றமா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்றும். சம்பவத்தைக் கண்டித்து, ஏப்ரல் 10ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.



இந்த நிலையில், இன்று கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சோகனூர் சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...