கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றாத காரணத்தால் இரு நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அபராதம் விதித்தது. மாஸ்க் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சமூக இடைவெளி பின்பற்றாத காரணத்தால் இரு நிறுவனங்களுக்கு, மாநகராட்சி அபராதம் விதித்தது. மாஸ்க் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், அதிகாரிகள் பூ மார்க்கெட் பகுதியில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, பூ வாங்கி கொண்டிருந்தவர்கள், பஸ்சுக்காக காத்திருந்தவர்கள், வாகனங்களில் சென்றவர்களில், முக கவசம் அணியாத, 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மார்க்கெட் வளாகத்தை சுற்றிப்பார்த்த ஆணையர், 'மாநகராட்சி ஊழியர் ஒருவரை நிரந்தரமாக நியமித்து, கொரோனா விழிப்புணர்வு அறிவிப்பு செய்ய வேண்டும்; மீறினால் அபராதம் விதிக்க வேண்டும். ஓரிடத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, பாதி கடைகளை வேறிடத்துக்கு மாற்ற வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
அதன்பின், ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆய்வு செய்த ஆணையர், ஒரு பேக்கரியில், சமூக இடைவெளி பின்பற்றாமலும், முக கவசம் அணியாமலும் இருந்ததால், ரூ.5,400 அபராதம் விதித்தார். மற்றொரு கடைக்கு ரூ.5,000 அபராதம், முக கவசம் அணியாமல் இருந்த இருவருக்கு, தலா ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
முக கவசம் அணியாத குற்றத்துக்காக, மாநகராட்சி மத்திய மண்டலத்தில், 47, கிழக்கில் 40, மேற்கில் 11, தெற்கில், 11 என, மொத்தம், 102 பேரிடம், தலா, 200 ரூபாய் வீதம், ரூ.20 ஆயிரத்து, 400 வசூலிக்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில், 22 கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, 4 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டது. 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல, மத்திய மண்டலத்தில் மூன்று கடைகளில் ஆய்வு செய்ததில், ஓரிடத்தில் விதிமீறல் கண்டறியப்பட்டது; ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டது.