திருப்பூரில் இன்சூரன்ஸ் பாலிசிக்காக பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை எரித்த மனைவி கைது!

திருப்பூர்: திருப்பூரில் கடன் தொல்லை மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிக்காக பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை எரித்த மனைவி, உறவினர் கைது செய்யப்பட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் கடன் தொல்லை மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிக்காக பெட்ரோல் ஊற்றி காருடன் கணவரை எரித்த மனைவி, உறவினர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த துடுப்பதியை சேர்ந்தவர் ரங்கராஜன் (62). இவர் விசைத்தறி மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.



இந்நிலையில், கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி காலில் காயமடைந்துள்ளார். இதற்காக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது மனைவி ஜோதிமணி(55), உறவினர் ராஜா(41) இருவரும் சேர்ந்து நேற்று இவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஆம்னி வேனில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வந்த போது காரில் இருந்து புகை வந்ததாகவும் இறங்கி ரங்கராஜனை மீட்பதற்குள் கார் முழுமையாக தீ பிடித்து எரிந்து விட்டதாகவும் இதில் ரங்கராஜன் உடல் கருகி உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் விசாரணையில் ஜோதிமணியும், ராஜாவும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. ரங்கராஜனுக்கு 1 கோடி ரூபாய் கடன் இருந்துள்ளது. மேலும், ரங்கராஜன் 3 கோடி ரூபாய்க்கு விபத்து காப்பீடு எடுத்திருந்ததும் அதில் நாமினியாக ஜோதிமணியை நியமித்திருந்ததும் தெரியவந்தது. கடன் தொல்லை இவ்வளவு உள்ள நிலையில் தன்னை கொன்று விடுங்கள் என ரங்கராஜன் கூறியதாகவும் இதனால் கடன் பிரச்சனையில் இருந்து மீளவும் மற்றும் அவர் 3 கோடி ரூபாய்க்கு செய்திருந்த விபத்து காப்பீடு தொகையை பெறவும் காருடன் கணவரை பெட்ரோல் ஊற்றி எரித்ததை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து, ஜோதிமணியையும் அவருக்கு உதவியாக செயல்பட்ட உறவினர் ராஜா என்பவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...