வால்பாறை நகருக்குள் புகுந்த சிறுத்தையை கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமராவை பொருத்தி உள்ளனர்.
கோவை: வால்பாறை நகருக்குள் புகுந்த சிறுத்தையை கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமராவை பொருத்தி உள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாழைத் தோட்டம் பகுதியில் நேற்று இரவு சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடியது தெரியவந்தது. சிறுத்தை நடமாட்ட வீடியோ பதிவுகள் வாட்ஸ் அப்பில் வலம் வந்தது.

இதன் காரணமாக வால்பாறை பகுதியில் மக்களிடையே அச்சமும் பீதியும் ஏற்பட்டது. உடனடியாக சிறுத்தையை கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க மக்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில், வனவர் முனியாண்டி தலைமையிலான வனத்துறையினர் வாழைத்தோட்டம் செவன்த் டே சர்ச் அருகில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நவீன கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.