வால்பாறை: வால்பாறையில் உள்ள மதுரை வீரன் கோயில் 67 வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகரின் மத்தியில் கக்கன் காலனியில் உள்ள ஸ்ரீ மதுரை வீரன் திருக்கோயில் 67 ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திருக் கொடி ஏற்றப்பட்டது.
திருவிழாவை முன்னிட்டு கக்கன் காலனி பகுதி மார்கெட் பகுதி வரை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன நேற்று திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இன்று மதியம் அன்னதானம் நடைபெற்றது தொடர்ந்து சிறப்பு நிகழ்வான ஸ்ரீ மதுரை வீரன் தேவியர் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் உடன் தேர்பவனி நடைபெற்றது.

கோயிலிலிருந்து செண்டை மேளங்கள் முழங்க புறப்பட்ட தேர் பவனியில் பெண்கள் மற்றும் ஆண்கள் நடனம் ஆடியபடி வந்தனர்.
திருத்தேர் ஊர்வலம் தபால் நிலையம், பழைய பேருந்து நிலையம். ஸ்டான் மோர் சந்திப்பு. காந்தி சிலை வளாகம். புதிய பேருந்து நிலையம். புது மார்க்கெட் வழியாக கோயிலை வந்தடைந்தது.
கோயிலில் சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றன இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்