திருப்பூர் அருகே காரோடு ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக கணவனை கொன்றதாக மனைவி கைது!

திருப்பூர்: திருப்பூர் அருகே திடீரென கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக கணவனை கொலை செய்ததாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் அருகே திடீரென கார் தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக கணவனை கொலை செய்த தாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் அருகே உள்ள துடுப்பதியை சேர்ந்த ரங்கராஜன்(52).கடந்த மாதம் விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். குணமடைந்த ரங்கராஜனை அவரது மனைவி ஜோதிமணி, உறவினர் ராஜா ஆகியோர் நேற்றிரவு கோவையில் இருந்து துடுப்பதிக்கு காரில் அழைத்துச் சென்றனர்.

அப்போது, பெருமாநல்லூர் பகுதியில் காரை நிறுத்திய ராஜா, ஜோதிமணி இருவரும் சாலை ஓரத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றனர். மீண்டும் காருக்கு வந்த ராஜா, காரை ஸ்டார்ட் செய்யும் போது, காரிலிருந்து புகை வந்துள்ளது. தொடர்ந்து கார் முழுவதும் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது.



அப்போது, ராஜா, ஜோதிமணி உடனடியாக இறங்கி ரங்கராஜனை காப்பாற்ற முயன்றுள்ளார். அதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி எரிய துவங்கியதில், ரங்கராஜன் தீயில் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு மனைவி ஜோதி மணியின் மீது ஒரு சந்தேக கண் இருந்துள்ளது. போலீசாரின் தொடர் விசாரணையில் கணவரை திட்டமிட்டு காரோடு எரித்துக்கொன்றதாக ஜோதி மணி தெரிவித்திருக்கிறார். அவருக்கு உதவியாக ராஜா இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஜோதி மணி, ராஜா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை மனைவியே உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...