பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விபத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலன் பிறந்த நாளில் கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே விபத்தில் காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலன் பிறந்த நாளில் கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள காபுலி பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் மகள் பர்தினி பொள்ளாச்சியில் உள்ள தனியார்பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே கல்லூரியில் படிக்கும் உடுமலையை சேர்ந்த ரமேஷ் என்பவரை பர்தினி காதலித்து வந்தார் .கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரமேஷ் குடிமங்கலம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். காதலனின் இறுதிச் சடங்கிற்கு சென்று வந்த பர்தினி மனமுடைந்து காணப்பட்டார்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பர்தினியை பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பர்தினி அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.