பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவர் கைது!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் மின்வாரிய ஊழியரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி அம்பேத்கர் நகரில் மின் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்வதற்கு மின்வாரிய ஊழியர் ராஜ்குமார், ஒப்பந்த ஊழியர் சங்கிலி பாண்டி இருவரும் சென்றுள்ளனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேரும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மின் ஊழியர்களுடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.



அப்போது மின்வாரிய ஊழியர்கள் ராஜ்குமார், சங்கிலி பாண்டி இருவரையும் அவர்கள் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர்களை கைது செய்ய வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட அனைத்து பிரிவு மின்வாரிய ஊழியர்கள் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

மின்வாரிய ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர் இதையடுத்து சதீஷ்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...