முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்; மாநகராட்சி ஆணையர் அதிரடி!

கோவை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் தலா ரூ.200 அபராதம் விதித்துள்ளார்.


கோவை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாதவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் தலா ரூ.200 அபராதம் விதித்துள்ளார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி சார்பில் கொரோனா தொற்று பரவுதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம்‌ மற்றும்‌ மத்திய மண்டல பகுதிகளில்‌ கொரோனா தடுப்பு பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ ஆய்வு மேற்கொண்டார்.



மேட்டுப்பாளையம்‌ சாலை, பூமார்க்கெட்‌ பகுதிகளில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, பூமார்க்கெட்‌ பகுதியில்‌ பொதுமக்கள்‌, பேருந்து பயணிகள்‌, இருசக்கர வாகனங்களில்‌ செல்வோர்‌, நான்கு சக்கர வாகனங்களில்‌ செல்வோர்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ சென்றவர்களிடம் முக க்கவசம் அணியும் படி வலியுறுத்தினார். அவர்களுக்கு தலா ரூ.200/- வீதம்‌ அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.



அதனைத்‌ தொடாந்து, மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ அப்பகுதியில்‌ செயல்பட்டுவந்த தனியார்‌ பேக்கரியில் உள்ளோர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும்‌, முகக்கவசம்‌ அணியாமலும்‌ செயல்பட்டதால்‌ ரூ.5400/- அபராதமும்‌, மற்றொரு கடைக்கு ரூ.5000/- அபராதமும்‌, முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த 2 நபார்களுக்கு தலா ரூ.200/- வீதம்‌ அபராதம்‌ விதிக்க உத்தரவிட்டார்.

கொரோனா நோய்‌ தொற்றின்‌ தீவிரத்தை உணர்ந்து பொதுமக்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்து, சமூக இடைவெளி மற்றும்‌ அரசின்‌ சுகாதார வழிமுறைகளை தவறாமல்‌ பின்பற்றி நோய்‌ தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையர் கேட்டுக்கொண்டார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...