பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் புதிய உச்சமாக இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் தாக்கத்தின் போது ஒரே நாளில் அதிக பட்சமாக 15பேருக்கு மேல் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், தற்போது புதன்கிழமை 8 பேர், வியாழக்கிழமை 16 பேர் என இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை இன்று 31 ஆக அதிகரித்தது.
இதில் பொள்ளாச்சி நகராட்சி உட்பட்ட பகுதியில் 11 பேருக்கும், மாக்கினாம்பட்டி, வஞ்சியாபுரம், சின்னாம்பாளையம், சிஞ்சுவாடி உள்ளிட்ட பகுதிகளில் 10 பேருக்கும், புளியம்பட்டி, திப்பம்பட்டி பகுதிகளில் 5 பேருக்கும், ஆனைமலை, பெத்தநாயக்கனூர் பகுதிகளில் 5 பேருக்கும் என 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிக்கொண்டே வருகிறது. ஆனால், பொள்ளாச்சி பகுதி பொதுமக்கள் சிலர் மட்டுமே கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கின்றனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல்அலட்சியமாக இருக்கின்றனர்..
கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று பரவல் இரு மடங்காக பரவி வருகிறது. இன்னும் சில நாட்கள் இதுதொடருமானால் பொள்ளாச்சி பகுதியில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமாகிவிடும். பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.