திருப்பூர்: நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
மோடி ஆட்சிக்கு வந்தால் சிறு குறு தொழில்கள் வளம் பெறும் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால் , இந்த 7 வருட ஆட்சியில் சிறு குறு தொழில்கள் முற்றிலும் அழிந்து , கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் வளர்ந்து வருகின்றன.
நூல் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது. லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பின்னலாடைத் தொழில் , தற்போது தான் மீண்டு வருகிறது. இந்தநிலையில், நூல் விலையேற்றம் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. நூல் விலை தொடர்பாக மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு 2 கடிதங்கள்எழுதியுள்ளேன். தற்போது வரை மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசின் பஞ்சாலையில் இருந்து மத்திய அரசே தரமான நூல்களை தமிழகத்திற்கு தர வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த நடைமுறையை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஆளுநர் ஜனநாயக முறைக்கு மாறாக நடந்து கொண்டிருக்கிறார். புதிய அரசு அமைவதற்கு முன்னதாக அவசர கதியில் துணை வேந்தர்களை நியமிப்பது ஜனநாயக விரோதம். தேர்தலில் திமுக தலைமையில் அங்கம் பெற்றுள்ள விசிக கட்சிக்கு பணியாற்றிய இருவர் அரக்கோணத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது அரசியல் சாதி படுகொலை.” இவ்வாறு அவர் கூறினார்.