திருப்பூர் அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன், மகள் தூக்கிட்டு தற்கொலை..!

திருப்பூர்: திருப்பூர் அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன், மகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (50), இவரது மனைவி செல்வி (47), இந்த தம்பதிக்கு அஸ்வின் (19) என்கிற மகனும், அகல்யா (17) என்கிற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி ராகவன் இறந்துவிட்டார். இதனால் மீனாட்சி உள்பட மூன்று பேரும் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வந்தாக தெரிகிறது.

இதனிடையே, நேற்று இரவு மீனாட்சி தனது தங்கை மகாலட்சுமியை தொலைபேசியில் அழைத்து, தன் கணவர் இறந்துவிட்டதால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் இங்கு வாழப்பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த தகவலின் பேரில் ஊத்துக்குளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் கதவை உடைத்துப் பார்த்தபோது மீனாட்சி, அஸ்வின், அகல்யா ஆகிய 3 பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...