கோவையில் 45 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் - மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள்!

கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 45 மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 250க்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தான் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவதால் பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவை மாநகராட்சி சார்பாக கொரோனா பரவுதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கொரோனா நோய் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவரும் போட்டுக்கொள்வது அவசியமானதாகும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இத்தடுப்பூசியானது இலவசமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது.

ஆகவே, பொதுமக்கள் இதில் தனிகவனம் செலுத்தி, கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்கள் சமூகத்தையும் பாதுகாக்கும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்வதால் சுமார் 40 சதவீதம் வரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும்,’’ என்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...