கோவை: ஏர் அரேபியா விமானத்தில் 26 லட்சம் மதிப்பிலான தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் கொண்டு வந்த 2 பேர் பேரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இன்று அதிகாலை 3:30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு அரேபியாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. அனைத்து, பயணிகளும் முழுமையான பரிசோதனைக்கு பின்பாக வெளியே அனுமதிக்கப்பட்டு வந்துகொண்டிருந்த போது, சந்தேகப்படும்படியான இரண்டு நபர்களை அதிகாரிகள் பிடித்து அவருடைய பேக்கை சோதனை செய்தனர்.
அப்பொழுது, தங்கத்தை பேஸ்ட் வடிவில் உருக்கி மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. ஒருவரிடம் 296 கிலோகிராம், மற்றவரிடம் 320 கிலோ கிராம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை செய்ததில் முகமது யாசிர் (வயது 30), இர்பான் (வயது 35), என்பது தெரியவந்தது. தொடர்ந்து, சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களிடம் இருந்த 26 லட்சம் மதிப்பிலான தங்க பேஸ்ட்களை தங்க நகை நிபுணரிடம் ஒப்படைத்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
முறையற்ற வகையில், கடத்தி வரப்பட்ட 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.