கோவை: இந்திய அளவில் எடுக்கப்பட்ட சர்வே முடிவுகளின் அடிப்படையில் கோவை மாநகரம் பாதுகாப்பான நகர பட்டியலில் முதலிடத்தையும், வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் 7வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் துாய்மை நகரங்களை தர வரிசைப்படுத்துவதுபோல், வாழத்தகுதியான நகரங்கள் பட்டியலையும் வெளியிடுகிறது. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அதன் அடிப்படையில் நகரங்களை மதிப்பிடுகிறது. அந்தவகையில் 2020-ம் ஆண்டு நாடு தழுவிய அளவில் 111 நகரங்களில், 30.2 லட்சம் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-35 வயது, 35க்கு மேல், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக பிரித்து கருத்து கேட்கப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
நாடு தழுவிய அளவில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரங்கள் வரிசையில், மொத்தம் 100 மதிப்பெண்ணுக்கு 50.52 பெற்று 12-வது இடத்தை கோவை மாநகராட்சி பெற்றுள்ளது. பொருளாதாரத்தில் - 4வது இடம், சேவை வழங்குவதில் - 19-வது இடம், தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் - 23-வது இடம், திட்டமிடுவதில் 29-வது இடம், நிர்வாகம் செய்வதில் 16-வது இடம் என கோவை பெற்றுள்ளது.
வாழத்தகுதியான நகரங்கள் வரிசையில் 59.72 மதிப்பெண் பெற்று ஏழாமிடத்தை கோவை மாநகராட்சி பெற்றுள்ளது. அதேநேரம், வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடும்போது இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது. தரமான கல்வி, மருத்துவ வசதி, வீடு, சுகாதாரம், குப்பை சேகரிப்பு, தரமான குடிநீர், பாதுகாப்பு, பொது போக்குவரத்து, பெண்களுக்கு பாதுகாப்பான இடம், காற்றின் தரம், பொருளாதார வசதி, மின் விநியோகம் உள்ளிட்ட 21 வகையான தலைப்புகளின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் 80.3 மதிப்பெண் பெற்றதால் 10-வது இடத்தை கோவை பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக பாதுகாப்பான நகரங்கள் வரிசையில் முதலிடமும், கல்வியில் 10-ம் இடமும், மருத்துவம் மற்றும் வீட்டு வசதியில் 31-வது இடத்தையும் பெற்றுள்ளது. சுற்றுச்சூழலில் 31, பசுமைப்பரப்பில் 42-வது இடத்தைப் பெற்று பின்தங்கியுள்ளது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சியில் ஏழாமிடம், பொருளாதார வாய்ப்பில் 12-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மாநகராட்சியின் சேவைப் பட்டியலில் 12-வது இடத்தையும், வாழத்தகுதியான நகரங்கள் வரிசையில் ஏழாமிடத்தையும் கோவை பெற்றுள்ளது. மக்களின் ஒத்துழைப்பால் அகில இந்திய அளவில் இத்தகைய ரேங்க் பெற முடிந்ததில் மகிழ்ச்சி. இதே ஒத்துழைப்பு இருந்தால், தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணிக்க முடியும்' என்றனர்.
பொருளாதாரத்தில் 4-வது இடம், பொருளாதார வளர்ச்சியில் 7-வது இடம், கல்வியில் 10-வது இடம், சேவை வழங்குவதில் 19-வது இடம், தொழில்நுட்பத்தில் 23-வது இடம், திட்டமிடுதலில் 29-வது இடம், நிர்வாகம் செய்வதில் 16-வது இடம், மருத்துவம் மற்றும் வீட்டு வசதியில் 31-வது இடம், சுற்றுச்சூழலில் 31-வது இடம், பொருளாதார வாய்ப்பில் 12-வது இடம் என அனைத்துப் பட்டியலும் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.