சைவ உணவில் கரப்பான் பூச்சி: ஏர் இந்தியா விமான சேவையின் நிலை?

ஐதராபாதிலிருந்து சிகாகோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட சைவ உணவில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 ஐதராபாதிலிருந்து டெல்லி வழியாக அமெரிக்காவின் சிகாகோவுக்கு ஏர் இந்தியா விமானம் சென்றது. அதில் பயணித்த ராகுல் ரகுவன்சிக்கு விமானத்தில் உணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அதில் ஒரு கரப்பான் பூச்சி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
இதையடுத்து விமான ஊழியரிடம் முறையிட்ட ராகுல், தனது டுவிட்டர் பக்கத்தில் ஏர் இந்தியா விமானத்தில் கொடுக்கப்பட்ட கரப்பான் பூச்சியுடன் கூடிய உணவை படம்பிடித்து பதிவேற்றியுள்ளார்.
 
இதுகுறித்து ஏர் இந்தியா விமான நிறுவன தகவல் தொடர்பு அதிகாரி தனஞ்செய் குமார் எங்கள் விமானத்தில் பயணித்த ராகுல் என்பவருக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து மிகவும் வருந்துகிறோம். இந்த தவறு குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...