ஆழியாறு குரங்கு அருவி இனி `கவியருவி' என அழைக்கப்படும்!

பொள்ளாச்சி: ஆழியாறு குரங்கு அருவி இனி `கவியருவி' என அழைக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி: ஆழியாறு குரங்கு அருவி இனி `கவியருவி' என அழைக்கப்படும் என்று வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

ஆழியாறு குரங்கு அருவி பொள்ளாச்சி பகுதியில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வனத்துறை சார்பில் ஆழியாறு குரங்கு அருவியில் பராமரிப்புப் பணிகள்நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக குரங்குகள் தொடர்பான கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்களில் குரங்குகள் குறித்த கவிதைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வண்ண ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.



மேலும் பல ஆண்டுகளாக `குரங்கு அருவி' என அழைக்கப்பட்டு வந்த இந்த அருவிக்கு `கவியருவி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சங்க இலக்கியங்களில் குரங்குகளுக்கு கவி என்ற பெயர் உள்ளது. பல பாடல்களில் குரங்குகள் பற்றி புலவர்கள் குறிப்புகள் கொடுத்துள்ளனர். தற்போது குரங்கு அருவி அடிப்படை வசதிகளுடன் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த அருவிக்கு ஒரு புதுமையைஏற்படுத்தும்விதமாகவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் அருவிக்கு `கவியருவி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...