பொள்ளாச்சி: தைப்பூசத்தை முன்னிட்டு பொள்ளாச்சி சுப்பிரமணியசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு பொள்ளாச்சி கடைவீதி அருகே உள்ள சுப்பிரமணியசாமி கோயிலில்சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு வழக்கமாக முக்கிய வீதிகள் வழியாக நடக்கும் திருவீதி உலா இந்தமுறை கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. மாறாக கோயில் வளாகத்துக்குள் கட்டுப்பாடுகளுடன் திருவீதி உலா நடைபெற்றது.
இதேபோல, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் கோயில் உடனமர் ஜோதி லிங்கேஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் உள்ள சுப்பிரமணியசாமி சிலைக்கு சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. சுப்பிரமணியசாமி சிறப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.