கோவை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் சாவு!

கோவை: கோவை மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாரடைப்பில் நேற்று நள்ளிரவில் திடீரென காலமானார்.


கோவை: கோவை மாநகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் மாரடைப்பில் நேற்று நள்ளிரவில் திடீரென காலமானார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ஆர்.எஸ்.புரம் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் முருகேசன் (வயது 52). இவர் நேற்று மதியம் போலீஸ் நிலையத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை சித்ரா பகுதியிலுள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகக்கூறி ஐ.சி.யூ.வில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்ஸ்பெக்டர் முருகேசன் கோவை உக்கடம், பெரியகடைவீதி, வெரைட்டி ஹால் மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்திலும் சப்-இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்தவர். கடைசியாக உக்கடத்தில் இருந்து பதவி உயர்வு பெற்று ஆர்.எஸ்.புரத்தில் கடந்த ஒரு வருடமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் அவர் திடீரென மாரடைப்பில் இறந்தது காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேசன் அனைத்து தரப்பு மக்களிடமும், செய்தியாளர்களிடமும் மிகவும் அன்போடும், மரியாதையோடும், பாசத்தோடும் பழகக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....