கோவை அருகே, டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது!

கோவை: கோவை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாக விற்பனையாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாக விற்பனையாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி உட்கோட்டம், செட்டிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஈச்சனாரியிலிருந்து எல்.என்.டி.பைபாஸ் செல்லும் வழியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்தக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரியும் வினோத் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு புகார் அளித்திருந்தார்.

புகார் மனுவில், `நான் சூப்பர்வைசராக பணியாற்றும் கடையில் தொடர்ந்து அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மேலாக மது பாட்டில்களை விற்று வருகின்றனர்' என்று கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து நேற்று 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அந்தக் கடையில் சோதனை செய்தனர். அதில் கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கு பணியிலிருந்த சேல்ஸ்மேன் லெனின், பார் உதவியாளர் சரவணன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரசு நிர்ணயித்த மதுபான திற்கும் மேலாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து தினம்தோறும் லட்சக்கணக்கில் பணம் ஈட்டுவது தெரியவந்தது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று அதிகாலை அவர்கள் இருவரையும் கைது செய்து பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர். குடிமக்கள் கோரிக்கைகளாக வைத்து வந்த இந்தப் புகாரை கடையின் சூப்பர்வைசர் புகார் அளித்ததன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் குடிமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேலாவது டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையிலேயே வியாபாரம் செய்வார்களா பார்க்கலாம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...