நீலகிரி: உதகை அருகே திருமணம் ஆசை கூறி 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள வெலிங்டன் ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் ஆண்டனி வினோத் (34). ஏற்கனவே திருமணமான இவர் சமையல் கலை படிப்பு முடித்து வேலை தேடி வந்தார்.
கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் கர்ப்பமான மாணவியின் கருவை கலைக்க மாத்திரைகள் கொடுத்து கருவை கலைத்துள்ளார்.
பின்னர் மீண்டும் திருமண ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு கருவினை கலைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உதகை போலீசார் வழக்கு பதிவு செய்து மைனர் பெண்ணை ஏமாற்றி கற்பழித்த ஆண்டனி வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு உதகை மகளிர் நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாசலம், ஆண்டனி வினோத்துக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். போக்சோ சட்டத்தில் அதிகபட்ச தண்டனை இது என்பது குறிப்பிடக்கது.