கோவையில் முதன் முறையாக பந்தய வகை மோட்டார் சைக்கிள் ப்ரணா புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் அறிமுகம்!

கோவை: கோவையில் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பந்தய வகை மோட்டார் சைக்கிள் ப்ரணா புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் கோவையில் இன்று அறிமுகம் செய்துள்ளது.

கோவை: கோவையில் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பந்தய வகை மோட்டார் சைக்கிள் ப்ரணா புதிய எலக்ட்ரிக் சூப்பர் பைக் கோவையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. 

இதன் அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது. 



விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள் கலந்து கொண்டு பைக்கை இயக்கி துவக்கி வைத்தார். விழாவிற்கு வந்திருந்த, அனைவரையும் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (பி) லிமிடெட், நிர்வாக இயக்குனர் பொறியாளர் மோகன்ராஜ் ராமசாமி வரவேற்றார். நிறுவனத்தின் இயக்குனர்கள் செல்லப்பன், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (பி) லிமிடெட், நிர்வாக இயக்குனர் பொறியாளர் மோகன்ராஜ் ராமசாமி பேசுகையில்:- 

மரங்கள் குறைந்து வருவதாலும், மாசுபடுத்தும் வாகனங்கள், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், உலக அளவில் காற்றின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பயணிகள், போக்குவரத்து வாகனங்களில் பயன்படும் கரிம எரிபொருட்களால் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. ஆனால், இவை மாறும் காலம் இதோ வந்து விட்டது.

ஆரோக்கியத்துக்கான விழிப்புணர்வு, சுகாதாரமாக வாழ தூய்மையான சுற்றுச்சூழல் தேவை, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த மக்களின் விருப்பம் போன்றவை, சர்வதேச அளவில், பல நாடுகளில் ஒரு தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமாகியுள்ளது. தற்போது இந்தியாவில் வேகமாக ஏற்பட்டு வரும் இந்த மாற்றம், யாருக்கும் வியப்பை உண்டாக்காது. இந்தியாவில், மின்சார வாகன தொழில் நிறுவனங்கள் எதிர்காலத்தில் முன்னணியில் இருக்கும்.

ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (பி) லிமிடெட், இந்தியாவில் வெற்றிகரமான ஸ்டார்ட் அப் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோவையில் ஏற்கனவே உள்ள உற்பத்தி தொழிற்சாலையை மேம்படுத்தி, தொடங்கியுள்ளது. இந்தியாவில் இந்த தொழிற்சாலையை தொடங்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவின் டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பல ஆண்டுகள் பணியாற்றியவர். இந்த நிறுவனம், தற்போது ஒரு கம்பீரமிக்க மின்சார வாகனமாக, பந்தய வகை மோட்டார் சைக்கிளாக ப்ராணா-வை, முதல் தயாரிப்பாக அறிமுகம் செய்துள்ளது.



பாரத் நிலை மாசுக்கட்டுப்பாட்டில் ப்ராணா (பிஎஸ் இன்பினிட்டி) யில் பூஜ்ஜியமாக பெற்றுள்ளது. புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிள், பல்வேறு காரணங்களால் பல்வேறு வகைகளில் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. மின்சார வாகனம் என்பதால், சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத வாகனமாகவும், பயணிப்போரின் பாதுகாப்பாகவும், காற்று தடையை குறைக்கும் ஏரோடைனமிக் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. பந்தய திறன் முறையில் மணிக்கு 123 கி.மீ.,வேகத்தில் செல்லும். நான்கே நொடியில் மணிக்கு 60 கி.மீ.,வேகத்தை எட்டும்.

பெட்ரோல், டீசல் வகை பயன்பாட்டால், உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் பிற கேஸ் வகை எரிபொருள் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சமயத்தில், எலக்ட்ரிக் பந்தய வகை பைக் அறிமுகம் மிக முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. இது, இந்த பூமியில் தூய்மையான, பசுமையான புரட்சியை ஏற்படுத்துவதின் தொடக்கம்.

நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் திருப்திப்படும் வகையில், தரமான ஒரு தயாரிப்பை தருவதற்காக, நன்கு அறிந்த தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களையும் கவனமுடன் தேர்வு செய்துள்ளது எஸ்விஎம். பிரணா கிராண்ட், ஒரு முறை சார்ஜ் செய்தால், இயல்பான ஓட்டத்தில் 126 கி.மீ.,தூரம் வரை செல்லக் கூடியது. பெட்ரோல் வாகனத்தை விட மேலான இழுதிறன் கொண்டது. இந்தியாவில் உள்ள பிற எலக்ட்ரிக் வாகனத்தை விட, இருமடங்கு, உயர்ந்தது. இந்த வாகனத்தில் கிளட்ச், கியர்கள் இல்லை என்பதால், பராமரிப்பு செலவு குறைவானது. 

இன்ஜினிலிருந்து தானாகவே பிரிந்து கொள்ளும் வசதியில் பிரேக் அமைப்பு உள்ளதால், சறுக்கி விடும் என்ற அச்சமின்றி பயன்படுத்தலாம். சுற்றுச் சூழலுக்கு ஏற்றவகையிலும், அதற்கு மேலும், செயல்பாடுகளை செய்வதில் நிறுவனம் தனிக்கவனம் செலுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் வாகனமாகவும், இந்த தலைமுறையினர் சிறந்த மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி மகிழ அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. 

பசுமையாக்கும் வாய்ப்புகளை கொண்ட திறமை வாய்ந்த பொறியாளர்கள் பலர் இந்தியாவில் உள்ளனர் என எஸ்விஎம் நம்புகிறது. மாசுபட்ட காற்றை வேறு வழியின்றி மக்கள் சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர். மின்சார வாகனங்களை கண்டறிவதால், உற்பத்தி செய்வதால், விற்பனை செய்வதால், நமது பூமியை மாசற்றதாக பலாயிரம் ஆண்டுகள் பாதுகாக்க முடியும்.

ப்ரணா, எல்எப் பி (LFP) பேட்டரியை பயன்படுத்துகிறது. 2000 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். இந்த வாகனம், 3,00,000 கி.மீ.,வரை இந்த பேட்டரியை பயன்படுத்திச் செல்ல முடியும். சிறந்த பயன்பாடு, செயல்திறன் ஆகியவற்றால் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் இருக்கும். பைக் ஓட்டுவோர், சராசரியாக மாதத்திற்கு 1500 கி.மீ,வரை ஓட்டுகின்றனர். 

அதேபோல, மாதந்தோறும் பெட்ரோலுக்காக ரூ.3000 செலவிடுகின்றனர். மாதத்தவணையாக 2000 - 4500 ரூபாய் வரை செலவிடுகின்றனர். மொத்தம் வாகனத்தை பயன்படுத்த ரூ.5000 - 7500 வரை செலவாகிறது. பிராணா மின்வாகனத்தை பயன்படுத்துவதால், 5,200 ரூபாய் மாதத்தவணை செலுத்த வேண்டியிருக்கும். அதோடு மின்கட்டணம் செலுத்துகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு பின், மின் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

ஏற்கனவே கோவையில் சிறந்த அனுபவங்களை கொடுத்து வரும் ப்ரணா, விரைவில் மதுரை, திருப்பூர், பாண்டிச்சேரி, கோழிக்கோடு மற்றும் திண்டுக்கல், பெங்களூரு நகரங்களில் தயாரிப்பு வசதிகளுடன் அறிமுகமாகவுள்ளது. 

மேலும், சென்னை, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் மற்றும் கேரளாவில் பல இடங்களில் துவக்க திட்டமிட்டுள்ளது. ப்ரணா வாகனத்தை பெற ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். ப்ரணா அணியினர் உங்களை தொடர்பு கொள்வர். அல்லது, நேரடியாக 8098202030, 8110049200 மற்றும் 8110059200 என்ற எண்களில் தேவையான, தகவல்களையும், தொழில்நுட்ப விபரங்களையும் பெறலாம்.   

எஸ்விஎம், தனது உற்பத்தி தொழிற்சாலையை சூழலை 50 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. தேவையைப் பொறுத்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் தொழிற்சாலைகளை ஏற்படுத்தவுள்ளது. 

இந்த மின்சார வாகனம், மூன்று வகையான செயல்வகையை கொண்டுள்ளது. ஓடுதல் மற்றும் பந்தயம், அதோடு பின்பக்கமாக செல்லுதல் என்ற செயல் வகைகள் உள்ளன. ஒருமுறை சார்ஜ் செய்வதில் மணிக்கு 250 கி.மீ.,வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. கேடிஎம் 250ஃ390, ராயல் என்பீல்டு போன்று ராயல் என்பீல்டு, யமஹா போன்று உயர்தர வாகனங்கள் பயன்பாட்டாளர்களுக்கு இது புதிய வகையாக இருக்கும். இந்த வாகனத்தின் ஆன்ரோடு விலை ரூ.2 முதல் 2.25 லட்சமாக இருக்கும். இதன் மின்சார மோட்டார் 35என்எம் திறனையும், 160 கிலோ எடையையும் கொண்டதாக இருக்கும்.

வாகனத்தை அறிமுகப்படுத்தி முதல் விநியோகத்தை துவக்கிவைத்து கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள் பேசியதாவது:- 

தொழில் துறையில் முன்னோடி நகரமாக இருக்கும் கோவை நகரில், புதிய முயற்சியாக ப்ராணா என்ற எலக்ட்ரிக் பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, கோவையின் தொழில் திறனை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. பல முன்னோடி தொழில்நுட்பங்களுக்கு பெயர் பெற்ற கோவை, சர்வதேச அளவிலான தரத்தில் இந்த பைக்கை அறிமுகம் செய்திருப்பது கோவை நகருக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது, என்றார். 

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....