முருகனின் வேலை கையில் எடுத்தாலும் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது - துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்

கோவை: முருகனின் வேலை கையில் எடுத்தாலும் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.


கோவை: முருகனின் வேலை கையில் எடுத்தாலும் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

பொள்ளாச்சி நகரப் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வெளிமாநில கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல், ஆச்சிபட்டி, ஆர்.பொன்னாபுரம் வழியாக ஜமீன் ஊத்துக்குளி வரை 9 கிலோ மீட்டர் தொலைவுக்கு இருவழிப் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்காக ரூ.50.30 கோடி மதிப்பீட்டில் பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கண்டு கொண்டு பணிகளை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, மு.கஸ்டாலின் முருகனின் வேலை கையில் எடுத்து தமிழக மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

இதுவரை இந்து கடவுள்களையும் தமிழ் மக்களின் பாரம்பரிய பழக்க வழக்கங்களையும் கேலி, கிண்டல் செய்து கொண்டு இருந்தார். தற்போது முதலமைச்சர் செல்லுமிடங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவதாலும், அதிமுகவிற்கு ஆதரவு பெருகி வருவதாலும், வேலையாவது கையில் எடுக்கலாமே என்று எடுத்துள்ளார்.

நமக்கு நாமே என்பது தான் ஸ்டாலினுக்கு பொருத்தமாக இருக்கும். அவர் எப்போதும் தன் குடும்பத்திற்காக மட்டுமே சிந்திப்பார். மக்களுக்காக எப்போதும், எதையும் செய்தது கிடையாது. வேலை கையில் எடுத்தாலும் ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என்றார்.

மேலும், தேர்தல் வரும் நேரத்தில் மட்டும் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை பற்றி ஸ்டாலின் பேசுகிறார் என்றும் இரண்டு ஆண்டுகாலம் இது குறித்து ஏன் பேசவில்லை என்றும் இந்த விவகாரத்தில் சிபிசிஐடி, சிபிஐ நீதிமன்றம் சென்றார்களா? வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறிய ஸ்டாலின் ஏன் இதுவரை எந்த ஆதாரங்களையும் கொடுக்கவில்லை என்றும் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மானத்தோடு வாழும் பொள்ளாச்சி பெண்கள் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனக்கூறி வருவதால், பெண் எடுக்கவும், பெண் கொடுக்கும் தயங்குகின்றனர். இவர்கள் அரசியல் செய்வதற்காக இந்த சம்பவத்தை கையில் எடுக்கிறார்கள்.

இது குறித்து சட்டசபையில் ஏன் பேசவில்லை? வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலாவது ஸ்டாலின் இது குறித்து கேள்வி எழுப்புவாரா? எந்த ஆதாரமும் இல்லாமல் இது போலித்தனமாக அரசியலுக்காக செய்யும் கபட நாடகம் என்று தெரிவித்தார்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....