கோவை: பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் 1098 என்று ஹெல்ப்லைன் குறித்தும், காவலன் ஆப் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்று சுகாதார செவிலியர் உஷா தெரிவித்தார்.

உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு புரவிபாளையத்தில் பெண் குழந்தைகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
குழந்தைகள் நல திட்ட அலுவலர் மீனாகுமாரி தலைமையேற்ற இந்நிகழ்ச்சியில், பெண் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் குறித்து சுகாதார செவிலியர் உஷா பேசினார். மேலும் பெண் குழந்தைகளுக்கான பாலியல் விழிப்புணர்வு குறித்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கான, தன்னம்பிக்கை வளர்த்தல், உடல்நலம் மற்றும் பெண் குழந்தைகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய சைல்ட் ஹெல்ப்லைன் 1098 பற்றியும் காவலன் ஆப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் பெண் குழந்தைகள் பலர் கலந்துகொண்டனர்.