வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இருசக்கர வாகனப் பேரணி!

திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.


திருப்பூர்: மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பூரில் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பாக கோவில்வழி, பாளையக்காடு, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இரு சக்கர வாகனங்களில் தேசியக் கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே பேரணியை நிறைவு செய்தனர்.



அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தேசிய கொடியை ஏற்றி வைத்து அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், டெல்லியில் விவசாயிகளின் பேரணிக்கு ஆதரவு அளித்துவிட்டு, தற்போது தாக்குதல் நடத்தியிருப்பது மத்திய அரசின் தோல்வியை உறுதி செய்து வருவதாகவும், விவசாயிகளின் போராட்டமே மத்திய அரசின் அராஜக போக்கை நிறைவு செய்யும் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...