சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்தவகையிலும் பாதிக்காது - ஜவாஹிருல்லா

கோவை: சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்தவகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.



கோவை: சசிகலாவின் வருகை திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பை எந்தவகையிலும் பாதிக்காது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

கோவை ஆத்துப்பாலம், பகுதியில் உள்ள தனியார் அரங்கில் மனிதநேய மக்கள் கட்சியின் மேற்கு மண்டல பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி, பொதுக்குழுவில் பங்கேற்றார்.

இதில் முதல் நிகழ்வாக மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணி கொடி அணிவகுப்பு ஆத்துப்பாலத்தில் இருந்து குனியமுத்தூர் வரை நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் 500க்கும் மேற்பட்ட இளைஞரணி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழுவில் கோவையில் சிறப்பாக செயலாற்றிய சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் மருத்துவர்கள், ஜமாத் நிர்வாகிகள் என அனைத்து நபர்களுக்கும் கொரானா காலகட்டத்தில் சமூக சேவையில் ஈடுபட்டதற்காக அனைவருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

பின்னர் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற மனிதநேய மக்கள் கட்சி மாநிலத்தில் 7 மண்டலமாக பிரித்து வேலை பார்த்து வருகிறது எனவும், முதல்வர் கோவை வருகையின் போது அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தருவவதாக பேசியது சிரிப்பு தான் வருகிறது என்றார்.

சி.ஏ.ஏ சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தை கூட்டி அரசாணை வெளியிடச் சொன்னோம், ஆனால் அதிமுக அரசு நிராகரித்தது எனவும், போராட்டத்தின் போது இஸ்லாமியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற அதிமுக அரசுக்கு மனமில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மனிதநேய மக்கள் கட்சி கடந்த காலங்களில் சட்டமன்ற தேர்தல்களில் சொந்த சின்னத்திலே நின்றது என குறிப்பிட்ட அவர், திமுக தலைவர் முக ஸ்டாலின் கையில் வேல் எடுத்த நிலைப்பாடு குறித்த கேள்விக்கு: ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்ற அண்ணாவின் கொள்கையின் அடிப்படையில் திமுக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

அதேசமயம், அதிமுக அரசு மக்களை ஏமாற்ற ஜிகினா வேலைகளை பார்த்து வருகிறது எனவும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடையும் எனவும் தெரிவித்தார். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் யார் குற்றம் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும், சசிகலாவின் வருகை திமுக கூட்டணியின் வெற்றியை எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் காஞ்சி ப. அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுல்லா கான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர் அவர்கள், தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி, மாநில தொண்டரணி செயலாளர் சர்புதீன் மாநில மருத்துவ அணி செயலாளர் கிதிர் முகமது, சமூகநீதி மாணவர் இயக்க மாநில செயலாளர் நூறுதீன் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மேற்கு மண்டல பொதுக்குழு உறுப்பினர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...