டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு அதரவாக கோவையில் வேளாண் கருவிகளுடன் விவசாயிகள் போராட்டம்..!

கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நிலவி வரும் கடும் குளிர் காரணமாக, உடல் நிலை பாதிகப்பட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.


கோவை: தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு நிலவி வரும் கடும் குளிர் காரணமாக, உடல் நிலை பாதிகப்பட்டு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.



இந்த விவசாயிகளுக்கு ஆதரவு, தெரிவிக்கும் விதமாக, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் வேளாண் கருவிகளுடன் விவசாயிகள் இன்று போராட்டம் மேற்கொண்டனர்.



கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தண்டுமாரியம்மன் கோவில் சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை முலங்கியப்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராட்டங்கள் நடைபெறும். தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளோம்" என்றார்.



இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....