2021 தேர்தலில் 'கள்' தடை நீக்கும் கட்சிக்கே பனை, தென்னை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப ஓட்டு..!

கோவை: கள் என்பது வாழ்வாதாரத்தை தாண்டி மிக்க ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. கள் என்பது தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக தடைசெய்யபட்டுள்ளது. இதனால், பனைத்தொழிளாலர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது, இதற்காக பல இயக்கங்களும் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.



கோவை: கள் என்பது வாழ்வாதாரத்தை தாண்டி மிக்க ஆரோக்கியமான பானமாக கருதப்படுகிறது. கள் என்பது தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக தடைசெய்யபட்டுள்ளது. இதனால், பனைத்தொழிளாலர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளது, இதற்காக பல இயக்கங்களும் அமைப்புகளும் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

நம் அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இன்று வரை எந்த தடையுமில்லாமல், இத்தொழில் சிறப்பாக நடந்து வருகிறது. வாழ்வாதாரத்தையும் ஆரோக்கியத்தையும் மனதில் கொண்டு பின்வரும் கோரிக்கைகளை அமல்படுத்த வேண்டும், என்று பனைத் தொழிலாளர்கள் சார்பில் தமிழ்நாடு கள் இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனைதொழிலாளர்கள் சார்பில் அரசுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் தொகுப்பு:

1) தமிழ்நாட்டில் கள் தடைநீக்கம் குறித்து 2009 ஆம் ஆண்டு கள ஆய்வு நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி கே பி சிவசுப்பிரமணியம் குழு ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அதன்படி, தமிழகஅரசு உலகளாவிய நடைமுறையை பின்பற்றி இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 47ல் கொடுக்கப் பட்டுள்ள வழிகாட்டுதலின்படி கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும்.

2) பல இடங்களில் காவல்துறை மாமூல் வாங்கிக் கொண்டுகள் விற்க அனுமதிப்பதால் இளைஞர்கள் பனைத் தொழிலை முன்னெடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, காவல்துறை தனது அடக்குமுறை ஒடுக்கு முறையை பயன்படுத்தி கள் இறக்கும் தொழிலாளர்கள் மீது 'விஷசாராயம்' 'போன்ற பொய்வழக்குகளை பதிவு செய்கினறனர், இனிமேல், அவ்வாறு இல்லாமல் சட்ட வழிகாட்டுதலின்படி மட்டுமே உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3) பல மாவட்டங்களில் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் கள் இறக்கும் தொழிலாளர்களை காவல்நிலைய விசாரணைக்கு அழைத்து, கால தாமதப்படுத்தி அவர்களை துன்புறுத்துதல், பாளைகளை அறுத்து கலையங்களை உடைப்பது போன்ற நெருக்கடி தரும் செயல்களில் காவல்துறை ஈடுபடுகிறது, அது போன்ற செயல்களில் இனிமேல் காவல்துறை ஈடுபட கூடாது.

4) கள் தடை நீக்க கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டு தமிழகம் முழுவதும் 2 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தில், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஆதரவு உள்ளது.

5) எதிர்வரும் 2021 சட்ட மன்ற தேர்தலில் கள் தடை நீக்கும் கட்சிக்கே பனை, தென்னை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப ஓட்டுக்கள் பதிவாகும், பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கும் சக்தியாக அது இருக்கும்.

-ஆளும் அரசாக இருந்தால் கள் தடையை உடனே நீக்கி உத்தரவிட வேண்டும்.

- எதிர்க்கட்சியாக இருந்தால் கள் தடை நீக்கம் பற்றி தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

6) 15 வருடங்களுக்கு மேலான பனை தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை, அந்த நிலைமையை மாற்றி கள் தடை நீக்கப்பட மக்களை ஒருங்கிணைத்து கோரிக்கையை வென்றெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு கள் கூட்டமைப்புகளம் இறங்கியுள்ளது, என்று அவர்கள் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...