கோவை: 72 -ஆவது குடியரசு தின விழா கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
கோவை: இன்று காலை நடைபெற்ற 72 வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று விழாவை சிறப்பித்தார்.
இந்த விழாவில், 92 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையை சேர்ந்த சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

இவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 10 மாதங்கள் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்தமைக்காக அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

அதேபோல, விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய காவலர்கள், மற்றும் மழை, புயல், வெள்ளம், இயற்கை சீற்றங்களில் தங்களுடைய உயிர்களை பணயம் வைத்து பணியாற்றிய காவல் துறையைச் சேர்ந்த 124 பேருக்கு தமிழக முதல்வரின் பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர போராட்ட தியாகிகள், முதியோர் பென்சன், விதவை பென்ஷன், ஆதிதிராவிட நலத் துறை சார்பாக பயனாளிகளுக்கு உதவித்தொகை, வேளாண் துறை சம்பந்தப்பட்ட அவர்களுக்கான விருதுகள் மற்றும் உதவித் தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் குடியரசு விழா மற்றும் சுதந்திர தின விழாக்களில் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதால், அரசு நலத்திட்ட உதவிகளை இந்த முறை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், காவலர் குடும்பங்கள் சேர்ந்தவர்கள், ஆயுதப்படை போலீசார், அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.