கோவையில் மருத்துவர் உமாசங்கர் விபத்து குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்திட வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி, முதல்வருக்கு கோரிக்கை..!

கோவை: சென்னை மருத்துவமனையின் இயக்குனர் உமாசங்கர் விபத்தில் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதலமைச்சரிடம் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார்.


கோவை: சென்னை மருத்துவமனையின் இயக்குனர் உமாசங்கர் விபத்தில் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி முதலமைச்சரிடம் திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி மனு அளித்துள்ளார்.

"கோவை காந்திபுரத்தில் உள்ள ‘சென்னை மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் உமாசங்கர், கடந்த 23-ஆம் தேதி மதியம் கோவை துடியலூர் கண்ணப்பநகர் பகுதியில் நடந்து சென்ற போது கார் மோதியது. அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்கள் ஏனோ அன்றைய தினம் வேலை செய்யவில்லை. ஆகவே, டாக்டர் உமாசங்கர் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தி தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.அவரது மரணம் விபத்துதானா? என்ற பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது",

என்று நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத்தின் சார்பில் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனை விவகாரத்தில் “வாடகை பாக்கிக்காக” கொடுத்த புகாரில் டாக்டர் உமாசங்கரை மின்னல் வேகத்தில் கைது செய்ய உத்தரவிட்டவர்கள் யார்? ஜாமினில் வெளிவந்து போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தவர் எப்படி விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார் ?அதில் உள்ள மர்மம் என்ன?.

இந்த ஒட்டுமொத்த மருத்துவமனை விவகாரத்திலும், அதிமுக முக்கிய அமைச்சர் ஒருவருக்கு தொடர்பு இருக்கிறது என்று வரும் செய்திகளையும் புறக்கணித்து விட முடியாது, என்று திமுக கழக அமைப்புச் செயலாளர், ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

"இந்நிலையில், மருத்துவர் உமாசங்கர் விபத்தில் மரணம் அடைந்தது குறித்த வழக்கினை கோவை மாநகர போலீஸ் விசாரிப்பது உண்மையை வெளிக்கொண்டு வர உதவி செய்யாது. ஆகவே, மருத்துவர் உமாசங்கருக்கு ஏற்பட்ட விபத்தை உடனடியாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றி, நியாயமான விசாரணை நடத்திட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமியை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....