கோவையில் 27 ஆம் தேதி சீமான் தலைமையில் 4 மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம்..!

கோவை: கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்று நடத்துகிறார்.


கோவை: கோவையில் நாளை மறுநாள் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை ஏற்று நடத்துகிறார்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகிற 27 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு சின்னிபம்பாளையம் உள்ள பிருந்தாவன் கார்டன் திருமண மண்டபத்தில், கோவை,ஈ ரோடு, திருப்பூர், நீலகிரி, ஆகிய மாவட்டங்களின் கட்சியின் அனைத்து பகுதி நிலை பொறுப்பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொள்கிற தேர்தல் 2021 குறித்த மாபெரும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.

மிக எழுச்சியாக நடைபெற உள்ள கூட்டத்தில்,.வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எடுக்க இருக்கிற பிரச்சார உத்திகள், தேர்தலுக்கு முன் நடவடிக்கைகள் குறித்து கட்சியின் அனைத்து நிலை பொறுப்பாளர்களோடு சீமான் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

கொங்கு மண்டல மாநகரத்தில் நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட தேர்தல் முன் தயாரிப்பு கூட்டமாக மிக பிரம்மாண்டமான முறையில் இந்தக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதனால், கட்சியினுடைய அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....