கோவை: நாளை கோவையில் உள்ள வ.ஊ.சி பூங்கா மைதானத்தில் குடியரசு தினவிழா நடைபெற இருக்கிறது. இதில், மாவட்ட ஆட்சியர் இராசாமணி கலந்து கொண்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கவுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோணா சிகிச்சை அளிப்பதற்காக 555 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சை பெற்ற கோவை நீதிமன்ற நீதியரசர், அங்கு அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளித்ததாக பாராட்டினார். எனவே, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கௌரவிக்கும் வகையில் குடியரசு தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ் கூறும்போது:- அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 4,000 பேர் வரை கொரோனா சிகிச்சை பெற்றுள்ளனர்.
பணியாளர்களின் கூட்டு முயற்சியே இதற்கு காரணம். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், தலைமை செவிலியர்கள், செவிலியர் மாணவர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட அனைத்து வகை பணியாளர்கள் உள்பட 1,400 பேருக்கு குடியரசு தினவிழாவில் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது, என்றார்.