போலீஸ்காரரிடம் செல்போன் பறிப்பு!

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்துச் சென்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரரிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்துச் சென்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- நாளை குடியரசு தின விழா கொண்டாடப்பட இருப்பதால் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கோவை நான்காவது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்துறையில் பணியாற்றும் அசோகன் (வயது 25) என்பவர் கோவை குனியமுத்தூர் அருகே உள்ள புட்டுவிக்கி ரோடு பாலம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அசோகன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோதே அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் மாயமாக மறைந்தனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த சிறப்புப்படை போலீஸ்காரர் அசோகன் கோவை குனியமுத்தூரில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் வழிப்பறி வழக்குப்பதிவு செய்து போலீசாரிடம் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சற்று முன் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...