கோவை உக்கடம் பெரியகுளத்தில் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட முதலமைச்சர்..!

கோவை: கோவை உக்கடம் பெரியகுளம் மேம்படுத்தப்பட்டுள்ளதை, நேற்று இரவு பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைக்கப்பட்டுள்ள 'ஐ லவ் கோவை' செல்பி கார்னரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


கோவை: கோவை உக்கடம் பெரியகுளம் மேம்படுத்தப்பட்டுள்ளதை, நேற்று இரவு பார்வையிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு அமைக்கப்பட்டுள்ள 'ஐ லவ் கோவை' செல்பி கார்னரில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இரண்டு நாள் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக கோவை வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். கோவை மாவட்டத்திற்கு பல்லாயிரம் கோடி வளர்ச்சி பணிகள் அதிமுக ஆட்சியில் நடைபெற்று வருவதாக முதல்வர் மக்களிடையே தெரிவித்து, வரும் தேர்தலில் ஆதரவு அளிக்கும்படி பிரச்சாரம் செய்தார்.



தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளத்தின் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரை வரவேற்கும் விதமாக வண்ண வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள எல் இ டி திரையரங்கில், அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் காணொளி திரையிடப்பட்டது.



பின்னர், "ஐ லவ் கோவை" என்ற செல்ஃபி கார்னர் முன்பு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் நின்று முதலமைச்சர் செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ஐந்து ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சியை கொடுத்த வீரத்தமிழன் இன்று கோவை மக்களை சந்தித்தார் எனவும் முதலமைச்சர் கோவை மக்களுக்கு நிறைய திட்டங்களை கொடுத்துள்ளார் எனவும், தெரிவித்தார்.

விவசாயி ஒருவரால் நல்லாட்சி கொடுக்க முடியும் என்று நிரூபித்துள்ள முதலமைச்சர், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சூப்பார் ஸ்டாராக உள்ளார் எனவும், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சர் ஆவார், என்று தெரிவித்தார்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...