கோவைக்கு என்ன செய்தது திமுக? முதல்வர் கேள்வி

கோவைக்கு திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? முதல்வர் கேள்வி



கோவை: கோவை மாவட்டத்தில் இரண்டாம் நாளாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, என்று காலை புலியகுளம் பெரிய விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தை துவங்கினார்.



பின்னர், கரியாம்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக தொண்டர் ஒருவர் வீட்டில் முதலமைச்சர் தேநீர் அருந்தினார். பின்னர், பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் அதிமுகவுக்கு வாக்கு அளிக்கும்படி பேசினார்.

முதலமைச்சர் வருகையையொட்டி சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். மேளதாளம் முழங்க முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.



பீளமேடு பரப்புரை

வருகின்ற தேர்தல் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் எனவும், தனது மறைவிற்கு பிறகும் நூறாண்டுகளுக்கு அதிமுக ஆட்சி இருக்கும் என்ற ஜெயலலிதா கனவை நிறைவேற்ற, அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

சிங்காநல்லூர் பரப்புரை

சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மக்களை பார்ப்பதில்லை. மக்களுக்கான திட்டங்களை அவர் செயல்படுத்தவில்லை. கடந்த தேர்தலில் தில்லுமுல்லு செய்து பொய் வாக்குறுதி அளித்து தான் வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்கினால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைப்பதில்லை.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் புதிய "வேல்"நாடகத்தை போடத் துவங்கி விட்டார் என்றும், தேர்தல் வந்தால் அத்தனை நாடகமும் போடும் ஒரு நடிகர் ஸ்டாலின். உண்மையான இறை பக்தி இருந்தால் தான் அருள் கிடைக்கும்,நாடகம் போட்டால் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவார்.

வடநாட்டில் இருந்து வந்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தான் டைரக்டர். ஏற்கனவே கோவையிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஆனால், அதுஅவர்களுக்கு கை கொடுக்கவில்லை. எனவே,போகுமிடத்தில் எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுப் போகிறார், ஸ்டாலின்.

இதனால் தான், தொழில்துறையினர் தமிழகம் நோக்கி வருகின்றனர். 13 ஆண்டு காலம் மத்தியில் கூட்டணி வைத்து ஆட்சி செய்தது திமுக? அவர்கள் குடும்பம் மட்டும் தான் வளர்ந்தது. அதிமுக ஆட்சியில் கோவையில் பிரம்மாண்ட பாலங்கள் அமைத்துக் கொடுத்திருக்கிறோம். கூட்டு குடிநீர் வசதி, புதிய கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களை கோவைக்கு கொடுத்திருக்கிறோம்.



திமுக ஆட்சியில் என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்? திமுக தலைவர் டெல்லிக்குச் என்றால் மகனுக்கு, மகளுக்கு பேரனுக்கு என்று பதவிக்காக மட்டும் தான் செல்வார்கள். திமுக என்ற தீய சக்தியை ஒழிக்கவே எம்ஜிஆர்., அதிமுகவை தோற்றுவித்தார்.

அதிமுக அரசு அனைத்து துறைகளிலும் தேசிய விருதுகளை வாங்கி வருகிறது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார். ஸ்டாலின் எந்த தேசிய விருதை வாங்கினார் ?



தைப்பொங்கல் கொண்டாட 2500 ரூபாய் மக்களுக்கு வழங்கியுள்ளது இந்த அரசு. ஊரடங்கு காலத்தில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுக்கும் மாநிலம் தமிழகம் தான்.

கேரளாவில் 100 யூனிட்டுக்கு 650 ரூபாய் கட்டணம் கட்டவேண்டும். வருடத்திற்கு 8000 ரூபாய் என்றால் ஐந்து வருடத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் மக்களுக்கு மின்சாரத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த இலவச மின்சாரம் ஸ்டாலின் வீட்டிற்கும் செல்கிறது. திமுக தொண்டர்கள் வீட்டிற்கும் செல்கிறது. கொரோனா காலத்தில் நிவாரணப் பொருட்களை கட்சி சார்பற்று மக்கள் அனைவருக்கும் வழங்கினோம், என முதலமைச்சர் பேசினார்.

காளப்பட்டி பரப்புரை

திமுக ஒரு குடும்ப கட்சி. ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அதற்கு சேர்மேன் ஸ்டாலின். டைரக்டர்கள் உதயநிதி, கனிமொழி எனத் தெரிவித்தார். கடவுளே இல்லை என்ற திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முருகனின் வேலை பிடித்துள்ளார் எனவும், வேல் பிடித்தால் தான் எதிர்கட்சியாகவாவது வர முடியுமென்ற நிலை உள்ளது.மேலும் வேலை பிடித்த போதே, ஸ்டாலினின் நாடகம் வெளுத்து போய்விட்டது என அவர் தெரிவித்தார்.

தெய்வகுணம் கொண்ட கட்சி அதிமுக எனவும், தெய்வ பக்தி இருப்பதால் தான் அதிமுகவை மக்கள் மதிக்கிறார்கள். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அன்னூர் பரப்புரை

இதன் பின்னர் அன்னூர் செல்லும் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரியாம்பாளையம் பகுதியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர், கோவிலுக்கு அருகேயுள்ள மலரவன் என்ற அதிமுக தொண்டர் வீட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேநீர் அருந்தினார்.



Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....