கோவை: மதபோதகர் பால் தினகரன் அலுவலகங்களில் 3-வது நாளாக நீடித்த வருமானவரி சோதனையின் முடிவில், பால் தினகரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறையினர் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்தவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருபவர் பால்தினகரன். இவருக்கு, தமிழகம் மற்றும் வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. பல்வேறு கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். அந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை, என வருமான வரித் துறைக்கு புகார் வந்ததையடுத்து அவர்கள் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள 25 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை பாரிமுனை பிரச்சாரம் அரங்கம், அடையாறு ஜீவரத்தினம் நகர் வீடு, ஆர்.ஏ.புரம் இயேசு அழைக்கிறார் அரங்கம். உட்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்று இடங்களின் சோதனை நடந்தது. இதேபோல, கோவையில் காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா கிறிஸ்டியன் ஸ்கூல், உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 3 -வது நாளாக சோதனை தொடர்ந்தது.
இது குறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:-
இயேசு அழைக்கிறார் அமைப்பில் 3-வது நாள் சோதனையைத் தொடர்ந்து பல்வேறு விதமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அனைத்தையும் முறையாக கைப்பற்றி உள்ளோம். கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக குழும அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இருந்தாலும், சோதனை முடிந்த பின்னர் வெளிநாட்டில் உள்ள பால் தினகரனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.