கோவையில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்: திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கொலை, கொள்ளை அதிகரிக்கும்..!

கோவை: கோவையில் இன்றும், நாளையும் வருகிற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முதல்வர் கோணி அம்மனை தரிசித்துவிட்டு திரளாக கூடி இருந்த தேர்முட்டி ராஜவீதி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை தொடங்கினார்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பேணி பாதுகாக்கப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பு, கொலை, கொள்ளை அதிகரிக்கும், என கோவையில் மக்கள் மத்தியில் முதல்வர் பேச்சு. 

கோவை: கோவையில் இன்றும், நாளையும் வருகிற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முதல்வர் கோணி அம்மனை தரிசித்துவிட்டு திரளாக கூடி இருந்த தேர்முட்டி ராஜவீதி மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை தொடங்கினார். 

அப்போது அவர் பேசியதாவது: 







தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் ஜாதி சண்டை, மதச் சண்டைகள் இல்லாமல் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தால் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து அதிகரித்துவிடும்.

திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கிராமசபை கூட்டம் என்ற பெயரில் திண்ணையில் அமர்ந்து கொண்டு தனது கட்சிக்காரர்களை ஒன்றாகக் கூட்டிக்கொண்டு அதில் 10 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை அதிமுகவுக்கு எதிராக கேள்விகளை கேட்கச் சொல்லி அதற்கு பதில் அளிப்பது போல நடித்து வருகிறார். 

கோவை தேவராயபுரத்தில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில், ஒரு பெண் எழுந்து அவர் குறைகளை சுட்டிக் காட்ட முயன்றார். ஆனால், அந்தப் பெண்மணியை உடனடியாக ஸ்டாலின் கடும் கோபத்தோடு அப்புறப்படுத்தினார். அவர் கட்சியினர் அந்த பெண்ணை தாக்கினர். நல்ல தலைவராக இருந்திருந்தால் அந்தப் பெண் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பொறுமையாக அமர்ந்து சரியான பதிலை கூறுவதுதான் சிறந்த தலைமைக்கு அழகு. அப்பாவிப் பெண்களை ஒன்றாக கூட்டிச் சேர்த்து அமர வைத்துக் கொண்டு அதற்கு பெயர் கிராம சபை கூட்டம் என கூட்டி தொடர்ந்து அதிமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருகிறார். பெண்கள் மீது கோபப்படுவது தான் சிறந்த தலைமை பண்பா? 

புரட்சித்தலைவி அம்மா அரசை குறை சொல்ல ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. கிராம சபை கூட்டம் என்பது முழுக்க முழுக்க அதிமுகவை விமர்சிப்பது, அமைச்சர்களை குறை சொல்லுவது, கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி, திசை திருப்பும் நாடகத்தை ஸ்டாலின் அரங்கேற்றி கொண்டுள்ளார். நாங்கள் ஆட்சியில் இருந்தபோது என்னென்ன செய்தோம். நாங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்வோம், என மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பது தான் சிறந்த தலைமைக்கு பெருமை சேர்க்கும். 

நாடகமாடி தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி, வாக்குகளைப் பெற ஸ்டாலின் நினைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. இன்று காலை ஏழு மணியிலிருந்தே மக்கள் வெள்ளமென கூடி எனக்கு முன்பாக நிற்பதைப் பார்க்கும்போது அனைவரும் வருகிற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதை விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2010 - க்கு முன் 2011 - க்கு பிறகு என ஒரு தராசில் வைத்து எடை போட்டுப் பாருங்கள். நாங்கள் செய்ததே அதிகமாக இருப்பதை தராசின் திசையே காட்டும். 

எங்களுக்கு இறைவன் கொடுத்த இரண்டு தலைவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி அம்மா இருவரும் தெய்வமாக வாழ்ந்து எங்களை வழி நடத்துகிறார்கள். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், மண்ணில் மறைந்த பிறகும் மக்களிடம் நீங்கா இடம் பெற்றவர்கள். ஆனால், திமுக தலைவரோ அவர் குடும்பத்திற்காக வாழ்ந்து மறைந்தவர். மக்களுக்காக வாழ்ந்தவர் அல்ல. எங்கள் தலைவர்கள் மக்கள் சக்தியை பெற்று எண்ணற்ற சாதனைகளை செய்து தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் படியாக சாதனைகள் புரிந்துள்ளனர். 

அதிமுக அரசு அம்மா ஆசியோடு வீறுநடை போட்டுக் கொண்டு உள்ளது. அம்மா மறைவுக்குப் பிறகு 3 மாதத்தில் அதிமுக ஆட்சி கலையும், 6 மாதத்தில் கலையும் என ஸ்டாலின் கூறிவந்தார். இன்றோடு 4 வருடம் முடிவடைகிறது. ஸ்டாலினால் அதிமுக அரசை ஒன்றும் செய்யமுடியவில்லை. 

கடந்த 4 ஆண்டுகளில் 50 ஆண்டுகளுக்கு உண்டான சாதனைகளை செய்து இருக்கிறோம். உக்கடம் மேம்பாலம், வரைட்டி ஹால் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு, அம்மா மினி கிளினிக்குகள், புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம், காவல் துறை கண்காணிப்பாளர் கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகம், வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்பு,கோவை மருத்துவ மனை மேம்பாட்டு திட்டம், கோவை தொழில்வளம் மிகுந்த மாநகரம் அதனால் கடந்த 2019-ஆம் ஆண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டை கூட்டி 3 லட்சத்தி 5 கோடி மதிப்பீட்டில் 3000 தொழில்கள் தொடங்கப்பட உள்ளது. இதில் 5 லட்சம் பேர் நேரடியாகவும் 5 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 

கொரோனா வைரஸ் காலத்தில் 60 ஆயிரம் கோடியில் 74 தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது. அதில், ஒன்னே கால் லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். திமுக ஆட்சியில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. அதிமுக ஆட்சியில் மின்வெட்டு முழுமையாக சரி செய்யப்பட்டு மக்கள் நிம்மதி அடைந்தனர். அதனால், தொழில் வளம் மிகுதியாக பாதிக்கப்பட்டது. 



சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் பேணிக் காக்கப்பட்டுள்ளது. ஜாதி மத சண்டைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு தொழில் துறையில் முன்னேறி உள்ளது. ஒரு மாநிலம் முன்னேற வேண்டும் என்றால் சட்டம்-ஒழுங்கு, மின்சாரம், சுகாதாரம் ஒழுங்காக இருக்க வேண்டும். அதை நாங்கள் பேணிக்காத்து கொண்டுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, வியாபாரிகள் நிம்மதி இழப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அரங்கேறும். கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடிய திமுகவிற்கு உங்கள் ஓட்டா? என மக்களைப் பார்த்து கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்கள் கிடையாது என கோஷமாக பதில் அளித்தனர். 

திமுக முன்னாள் அமைச்சர்கள் 13 பேர் ஊழல் குற்ற வழக்கில் நீதிமன்றம் படிகளை ஏறி இறங்கி கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் ஊழல் செய்ததாக கூறி கவர்னரை சந்தித்து பொய்யான அறிக்கையை கொடுத்துள்ளார். அதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். இது மக்களை குழப்பும் காரியம். 

தமிழர் பண்டிகை பொங்கலை கொண்டாட மக்களுக்கு ரூ.2,500 வழங்கினோம். அதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்க முயற்சி செய்தார். 

நாட்டு மீதும் நாட்டு மக்கள் மீதும் அக்கறை கொண்ட ஒரே அரசு அதிமுக அரசு மட்டுமே. அதனால் மக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வருகிற சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு முதல்வர் மக்கள் மத்தியில் பேசினார். 

தொடர்ந்து செல்வபுரம் பகுதி, உக்கடம் பேருந்து நிலையம், குனியமுத்தூர், கிணத்துக்கடவு, அதனை தொடர்ந்து இன்று முழுவதும் பொள்ளாச்சி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...