கோவையில் சூடுபிடிக்கத் தொடங்கியது தேர்தல் பிரச்சாரம்: முதலமைச்சர் பழனிச்சாமி, ராகுல் காந்தி வருகை - 5,500 போலீசார் குவிப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ராகுல் காந்தி வருகை தரவுள்ள நிலையில், 5,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ராகுல் காந்தி வருகை தரவுள்ள நிலையில், 5,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வருவதை ஒட்டி, தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிவருகிறது. ஒருபுறம் கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என மறுபுறம் தலைவர்கள் பிரச்சாரத்தில் தமிழகம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று இரவு கோவை வருகிறார்.

கோவை வரும் முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் ஏராளமான அதிமுகவினர் திரண்டு வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பை பெற்றுக் கொண்டு காரில் சுற்றுலா மாளிகையில் இன்று இரவு தங்குகிறார்.

இதேபோல, தமிழகத்தில் காங்கிரஸ் வலுப்படுத்தும் வகையில் சட்டசபை தேர்தலை எதிர் கொள்ளும் வகையிலும் ராகுல்காந்தி எம்.பி களமிறங்கியுள்ளார். பொங்கல் பண்டிகை அன்று மதுரை வந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேரில் பார்வையிட்டார். அடுத்து கொங்கு மண்டல வாக்குகளை குறிவைத்து நாளை கோவை வரும் ராகுல் காந்தி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக நாளை காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல்காந்தி காலை 11 மணி அளவில் கோவைக்கு வருகிறார். அவருக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரண்டு சித்ரா, காளப்பட்டி சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். இதனை ஒட்டி காவல்துறை சார்பில் கோவை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பெரும் தலைவர்கள் கோவையில் ஒரே நாளில் முகாமிட்டு மக்களை சந்தித்து தங்களது கட்சிகளுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர். இவர்கள் இரண்டு பேரின் வருகையை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக விருதுநகர், ராமநாதபுரத்திலிருந்து போலீஸ்காரர்களும் திருச்சி, கரூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் உயர் போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வந்துள்ளனர்.

கோவை மாநகரில் 2,500 போலீசார் புறநகரில் 3,000 போலீசார் என மொத்தம் 5.500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தவிர சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு தலைவர்கள் கோவையில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொள்கிறார் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....