மருத்துவ ஓய்வுக்குப் பிறகு கமல்ஹாசன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் - மகேந்திரன், மநீம துணைத் தலைவர்

கோவை: மருத்துவ ஓய்வுக்குப் பிறகு கமல்ஹாசன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: மருத்துவ ஓய்வுக்குப் பிறகு கமல்ஹாசன் 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவந்தார். அப்போது, அறுவை சிகிச்சை செய்த காலில் அவருக்கு திடீரென மீண்டும் வலி ஏற்பட்டது.

இதனால் பிரசார நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கமல்ஹாசன் கடந்த 18-ம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது வலது காலில் மீண்டும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதனிடையே, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என கடந்த 19-ம் தேதி கமல்ஹாசன் அறிவித்தார்.

இதையடுத்து, மருத்துவமனையில் மருத்துவக்கண்காணிப்பில் இருந்த கமல்ஹாசன் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள கமல்ஹாசன் 7 முதல் 10 நாட்கள் வரை மருத்துவ ஓய்வில் இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மருத்துவ ஓய்வுக்கு ஓய்வுக்குப் பின்னரே 'சீரமைப்போம் தமிழகத்தை' எனும் தேர்தல் பிரச்சார பயணத்தின் 2வது சுற்றினை கமல்ஹாசன் தொடங்குவார் என மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....