இன்ஸ்பெக்டர் லஞ்ச வழக்கில் கோவை போலீஸ் கமிஷனர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்!

கோவை: இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.


கோவை: இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிய வழக்கு தொடர்பாக கோவை போலீஸ் கமிஷனர் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவில் 2013 -ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேகர். இவர் விழுப்புரத்தை அடுத்த விண்ணான்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் காரில் மதுபாட்டில் கடத்தியதால் அவரது காரை விடுவிக்க 20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஏட்டு சுந்தரமூர்த்தி ஆகியோரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சஸ்பெண்டு செய்தனர்.

இவர்கள் மீது குற்றவழக்கு தொடர அப்போதைய விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த சுமித் சரண் உத்தரவிட்டார். அதன்படி இருவர் மீதும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியம் அளிக்க அப்போதைய டி.ஐ.ஜி.யாக இருந்து தற்போது கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி வரும் சுமித் சரணை விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சுமித் சரண் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கு விசாரணையை நீதிபதி மோகன் வரும் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...