பொள்ளாச்சியில் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கைது; அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக வழக்கு..!

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி சேதுபதி நகரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி குறித்து முகநூலில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பதிவு செய்திருந்தார் எனவும், இதை பார்த்த அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் நவநீத கிருஷ்ணனிடம் இது குறித்து கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, செல்வராஜ் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், நவநீதகிருஷ்ணன் மீது அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவரை, போலீசார் ஜே.எம்- 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நவநீதகிருஷ்ணனை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.



முன்னதாக, மருத்துவ பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு நவநீதகிருஷ்ணனை போலீசார் அழைத்துச் சென்ற போது, அங்கு திரண்ட திமுகவினர், ஆளுங்கட்சியினர் திமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதாக கூறி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....