ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்..! நமது வாழ்வில் மாற்றத்தை உருவாக்கக் கூடியவர்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு!

கோவை: ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் எனவும் நமது வாழ்வில் மாற்றத்தை உருவாக்க கூடியவர்கள் என்று இலவச வினா - விடை மற்றும் சைக்கிளில் வழங்கி அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்தார்.



கோவை: ஆசிரியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் எனவும் நமது வாழ்வில் மாற்றத்தை உருவாக்க கூடியவர்கள் என்று இலவச வினா - விடை மற்றும் சைக்கிளில் வழங்கி அமைச்சர் எஸ். பி வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகராட்சி அரசு பள்ளிகளில் இன்று எஸ்.பி.வேலுமணி மாணவ மாணவிகளுக்கு இலவச வினா-விடை புத்தகம் மற்றும் இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.



அப்போது, பேசிய அவர், தாய் - தந்தை பேச்சை கேட்டு மதித்து நடக்க வேண்டும் எனவும் அதற்கு அடுத்ததாக ஆசிரியர்கள் நமக்கு கடவுளுக்கு சமமானவர்கள் என மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறினார்.

மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த 22 ஆண்டுகளாக வினா வங்கி புத்தகங்களை வழங்கி வருவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.

பின்னர், கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள அம்மணி அம்மாள் பெண்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் பயிலும் 407 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி வேலுமணி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.



தொடர்ந்து கோவை மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள ஏதுவாக வினா வங்கி புத்தகங்களை தன் சொந்த நிதியில் இருந்து 1195 பேருக்கு இலவசமாக வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ் பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.



அப்போது அவர் பேசுகையில், கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வினா வங்கி புத்தகங்களை வழங்கி வருவதாகவும், மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள இப்புத்தகங்கள் உதவிகரமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கொண்டு தரமான வினா வங்கி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான வினாக்கள் வினா வங்கிப் புத்தகத்தில் இருந்து கேட்கப்பட்டதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....