கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்!

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய ராணுவ பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய ராணுவ பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த முகாமில் பங்கேற்பதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ராணுவத்தில் தங்களை இணைத்துக்கொள்ள இளைஞர்கள் ஆர்வமுடன் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.



பல்வேறு மாநிலங்களில் இருந்து 1300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த முகாமில் அவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான குடிநீர், தேநீர், சிற்றுண்டி, மதிய உணவு, மற்றும் இரவு உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக 24 மணிநேரமும் அவர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் தங்குவதற்காக தற்காலிக குடில்கள் அமைத்தும் உதவி செய்து வருகிறார்கள். கோவையைச் சேர்ந்த ஆலயம் அறக்கட்டளையின் தலைவர் சந்திரசேகர் மற்றும் ஆலயம் அறக்கட்டளையின் நிறுவனர் சர்மிளா சந்திரசேகர் ஆகியோர் ஆலயம் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் உடன் இணைந்து இந்த சமூக சேவையை செய்து வருகின்றனர்.

இவர்களின் சேவையானது பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த இளைஞர்களுக்கு பேருதவியாக இருப்பதால் இந்த முகாமில் கலந்து கொள்ள வந்த இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், இவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்த முகாமானது இந்த மாதம் 26ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....