கோவை: `மத்திய அரசு வேளாண் சட்டங்களை நாடு முழுவதுக்குமான சட்டமாக இல்லாமல் மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்' என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- வேளாண் சட்டங்கள் பற்றிய விவசாயிகளின் ஐயம் பகுதிவாரியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும். விவசாயிகளுடன் சேர்ந்து மாநில அரசு அவர்களது தேவைகளை ஆய்வுசெய்து கவனிக்க வேண்டும். கூட்டு முயற்சியே முன்னேறும் வழி.
இவ்வாறு கூறியுள்ள அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த வீடியோ பேட்டியையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
விவசாயச் சட்டங்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை எந்த விஷயம் வருந்தச் செய்கிறது என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. இங்கே (தமிழ்நாடு) இருக்கக்கூடிய விவசாய சமூகத்தைச் சார்ந்த யாரையும் இந்த சட்டங்கள் பாதித்ததாகத் தெரியவில்லை. நான் பல விவசாயிகளுடன் பேசியிருக்கிறேன். அவர்கள் யாரும் அப்படி உணரவில்லை. நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அல்லது வெவ்வேறு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க சந்தேகங்கள் இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
நான் நினைப்பது, விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து கொண்டிருப்பது மற்ற குடிமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துகிறது. மேலும் விவசாயிகளும் பெருத்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இந்தப் போராட்டம் முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதால் அரசாங்கமும் சரிவர இயங்க முடியவில்லை. அதனால், நான் நினைப்பது இந்தச் சட்டங்களை நாட்டுக்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பரிந்துரையாக அளிக்கலாம். மேலும், இந்தச் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், என்ன மாதிரியான முதலீடுகள், எந்த வகையிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாகும் என்பதையும், தொடர் விநியோக சங்கிலிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை கொண்டு வரும் என்பதையும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விவரிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறுவிதமான கவலைகள் இருக்கலாம். ஏனென்றால் விவசாயமே ஒவ்வொரு மாநிலத்திலும் வேறுபடுகிறது. அவர்களுக்கு விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் என்ற சந்தேகங்கள் இருந்தால், மாநிலங்கள் தேவையான சட்டத் திருத்தங்களை செய்து இதுபோன்ற அம்சங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதுதான் முன்னோக்கிச் செல்வதற்கான வழி. ஆனால் தற்போது துரதிர்ஷ்டவசமாக அதிக அளவில் மக்கள் தேவையே இல்லாமல் இன்னல்களுக்கு உள்ளாவது என்பது மிகப்பெரிய அளவிலான தவறான புரிதல் என்றே நினைக்கிறேன்.
இந்நேரத்தில் மத்திய அரசு இந்தச் சட்டங்களை பரிந்துரைகளாக அளிக்கலாம். மாநில அரசுகள் அம்மாநில விவசாயிகளுடன் கலந்து பேசி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திருத்தங்களைச் செய்து அமல்படுத்திக் கொள்ளலாம். அதுவே நாடு முன்னோக்கிச் செல்வதற்கான வழியாக நான் பார்க்கிறேன். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.