கோவையில், பிளக்ஸ் ஓனர் வீட்டில் பட்டப்பகலில் 20 பவுன் நகை திருட்டு!

கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் பட்டப்பகலில் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகை திருடப்பட்டது.


கோவை: கோவை ரத்தினபுரி பகுதியில் பட்டப்பகலில் பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டர் வீட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 20 பவுன் நகை திருடப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை ரத்தினபுரி பகுதியில் வசிப்பவர் நாகராஜ். பிளக்ஸ் போர்டு காண்ட்ராக்டரான இவர் இன்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு அவரும், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டனர். சிறிது நேரம் கழித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது வீடு உடைந்து இருப்பதைப் பார்த்து அவருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்ததில் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....