சிங்காநல்லூரில் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவை: கோவை சிங்காநல்லூரில் மழையால் பெரிதும் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை சிங்காநல்லூரில் மழையால் பெரிதும் பழுதடைந்ததுள்ள ஹவுசிங் யூனிட் வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வலியுறுத்தி திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நா.கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே 17.55 ஏக்கரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் 960 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது.



35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது பாழடைந்து சிதிலமடைந்து உள்ளதாக தெரிவித்தார்.



அதேபோல, வீடுகள் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகவும் அரசின் மோசமான, முறைகேடான கட்டுமானமே காரணம் எனவும் இங்கு குடியிருக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த 2016, 20118 மற்றும் 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நிதி நிலை கூட்டத்தொடரில் இந்த வீடுகளின் நிலை குறித்து சட்டமன்றத்தில் பேசியதாகவும் புதிய வீடுகள் கட்டித்தர சட்டத்தில் இடமில்லை என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்ததாகவும் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பல முறை வலியுறுத்தியும், அங்கு வசிக்கும் மக்களுக்காக எந்த நடவடிக்கையும் அரசு எடுக்க முன்வரவில்லை என்றார்.

மேலும், அங்கு உள்ளவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனால், தமிழக அரசு செவி சாய்க்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, வீடுகள் இடிந்து பெரும் விபத்து ஏற்படும் முன், மழையினால் பெரிதும் சேதமடைந்துள்ள இந்த வீடுகளை உடனடியாக இடித்துவிட்டு, காலதாமதம் இல்லாமல், அதே இடத்தில் புதிய வீடுகளை கட்டித் தர வேண்டும் என்றார்.



மேலும், அதே இடத்தில் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தற்காலிக வீடுகள் அமைத்துத் தர வேண்டுமென்றும் என்று வலியுறுத்தி இன்று சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில், அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார்.

மேலும், இந்த அடிமை அரசு முற்றிலும் செயலிழந்து, முடங்கிக் கிடக்கிறது என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணமாக உள்ளது. பாதிக்கப்பட்டு உள்ள பொதுமக்கள் தங்களது உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்ள குரல் கொடுத்துப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கார்த்திக் எம்.எல்.ஏ ஆர்ப்பாட்ட முடிவில் செய்தியாளரிடம் கூறினார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவைச் சேர்ந்த கழக வட்டார பகுதியைச் சேர்ந்த கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...