திருப்பூர்: கொங்கு மண்டலத்தில் ராகுலின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும். மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தனித்து நின்று ஓட்டைப் பிரிக்காமல் வலுவான எங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என்று மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

ராகுல்காந்தி வருகின்ற 23-ஆம் தேதி முதல் கொங்கு மண்டலத்தில் மூன்று நாட்கள் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை நடத்தும் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-

``தமிழ் வணக்கம் என்கிற தலைப்பிலான ராகுல் காந்தியின் பிரச்சார நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. இம்முறை கொங்கு மண்டலத்தில் ராகுல் காந்தியின் வருகை எழுச்சிகரமானதாக இருக்கும். மேலும் நாடாளுமன்ற தேர்தலின்போது ராகுல் காந்தி தமிழகத்தில் மேற்கொண்ட பரப்புரையைவிட 5 மடங்கு அதிக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். கோவையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடும் அவர் திருப்பூரில் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி புதிய தொழிற்கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கேட்டறிய இருக்கிறார்.
புதுச்சேரியில் கூட்டணிக்குள் எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் நண்பர்களோடு இணக்கமான சூழ்நிலையையே விரும்புகிறோம். அதேவேளையில் தனியாக நிற்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழகத்தில் எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை. மேலும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ள மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமலஹாசன் எங்களோடு கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். அவர் தனித்து நின்று ஓட்டுகளை பிரிப்பதற்குப் பதில் வலுவான எங்கள் கூட்டணியோடு நின்று தேர்தலை எதிர்கொள்ளலாம். ரஜினிகாந்தை நாங்கள் ஏற்கனவே அழைத்தோம். ஆனால் பா.ஜ.க.வினர் கொடுத்த அழுத்தம் அவருக்கு ரத்த அழுத்தம் ஏற்படும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது. ரஜினிகாந்தின் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் காங்கிரசுக்கு இருக்கிறது. அவர்கள் எங்களோடு அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.
ராகுல்காந்தி பிரச்சார பயணத்துக்காகவே தமிழகம் வருகிறார். தேர்தல் தொடர்பான கூட்டணி உடன்பாடு இவையெல்லாம் குறித்து ஆலோசிக்க தேர்தல் நேரத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார். அண்டை நாடுகளில் கொரோனா தடுப்பூசியை அந்தந்த நாடுகளின் பிரதமர்களும், அதிபர்களும் தங்களுக்கு செலுத்திக் கொண்டு பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதுபோல இந்தியாவிலும் அதே நடைமுறையைப் பின்பற்றி பிரதமரும், மத்திய அமைச்சர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டால் பொதுமக்களிடையே நிலவும் அச்சத்தை தவிர்த்து இருக்கலாம்.'' இவ்வாறு அவர் கூறினார்.